Wi-Fi வலையமைப்பை விட வேகமாக இயங்கும் மொபைல் வலையமைப்பு!

Thursday, November 29th, 2018

தற்போது காணப்படும் வலையமைப்பு தொழில்நுட்பத்தில் வேகம் கூடியதாக Wi-Fi வலையமைப்பு இருக்கின்றது.

வயர்லெஸ் முறையில் குறுகிய தூரத்திற்கு மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக இவ் வலையமைப்பு காணப்படுகின்றது. எனினும் இவ் வலையமைப்பினை விடவும் மொபைல் வலையமைப்பானது பல நாடுகளில் வேகமாக இயங்குவதாக ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 80 நாடுகளில் இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவற்றில் 33 நாடுகளில் Wi-Fi வலையமைப்பினை விடவும் மொபைல் வலையமைப்பு வேகம் கூடியதாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வினை OpenSignal நிறுவனம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் பிரித்தானியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் Wi-Fi வலையமைப்பு வேகம் கூடியதாக இருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் அவுஸ்திரேலியாவில் சராசரியாக 13Mbps வேகத்தில் Wi-Fi செயற்படுவதாகவும், கட்டார், பிரான்ஸ், மெக்ஸிக்கோ, துருக்கி மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளிலும் இதனை ஒத்த வேகத்தில் Wi-Fi செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: