BMW M4, M3 ரக கார்களுக்கும் Apple Car Play!

Wednesday, June 15th, 2016

BMW கார் நிறுவனம் ஏற்கனவே தனது X5 M மற்றும் X6 M SUV ரக கார்களில்Apple Car Play பயன்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தனது புதிய BMW M4 மற்றும் M3 ரக கார்களிலும் Apple Car Play சாதனத்தை பயன்படுத்தும் வகையில் வழி செய்துள்ளது.

ஆனால் M3 sedan, M4 convertible மற்றும் M3 convertible ஆகிய ரக கார்களுக்கு இந்த Apple Car Play சாதனத்தை பொருத்திக் கொள்ள 300 டொலர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உயர் ரக வாகனங்களில் மட்டும் Apple Car Play தொழில்நுட்பத்தை புகுத்தி வரும் BMW நிறுவனம், எதிர்காலத்திலும் இதை தொடர்ந்து செயல்படுத்துமா என்பது சந்தேகம் தான்.

இருப்பினும் குறுகிய காலத்தில் தனது அனைத்து ரக கார்களிலும் இந்த தொழிநுட்பத்தை செயல்படுத்தி விட வேண்டும் என்பதில் BMW நிறுவனம் தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

Related posts: