பூமியில் வேற்றுக் கிரகவாசிகள்? வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

Sunday, March 27th, 2016

வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா? அல்லது இல்லையா? என்று உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால் வேற்று வாசிகள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்துள்ளனர்.

வேற்றுக் கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் முன்னணி நிபுணர்கள் இது வேற்றுக் கிரகவாசிகளை தொடர்பு கொள்ள ஏற்ற நேரம் என தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரபஞ்சத்தில் புத்தி கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளை கண்டறிய சீனா மிகபெரிய ரேடியோ தொலை நோக்கியை அமைக்க திட்டமிட்டுள்ளது.

தென் மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் இந்த தொலை நோக்கியை அமைக்கிறது. உலகில் இது போன்ற தொலை நோக்கி புர்டோ ரிகோவில் அமைக்கபட்டு உள்ளது.

தோமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி கூறுகையில், ”வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டமாக வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது.

அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமான விடயம் கிடையாது. அவர்கள் உணவு, தண்ணீர் என நம்மை போலவே இருப்பார்களா? என்பது சந்தேகம் தான். வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம்” என கூறியுள்ளார்.

மேலும், இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய புதிய திட்டம் ஒன்றை லண்டனில் தொடங்கியுள்ளார்.

இந்த திட்டத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரூ.640 கோடி செலவிடப்படும். ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி தொழிலதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கிறார்.

இதற்கிடையில் பிலெய்டன் என அழைக்கப்படும் வேற்றுக் கிரகவாசிகள் வடமேற்கு அர்ஜென்டினாவில் இருந்து 70 மைல் தூரத்தில் இருக்கும் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பறக்கும் தட்டுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் யுஎப்ஓ சார்ந்த பத்திரிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

பிலெய்டன் பேஸ் காச்சி, லா போமா, ரூட் 40 இடையே இருக்கலாம் என்றும், இதன் மற்ற பிரிவினர் பிரபஞ்சத்தின் மூலைகளில் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இது குறித்து யுஎப்ஓ ஆய்வாளர் ஸ்காட் வாரிங் கூறுகையில், பிலெய்டன்கள் நார்டிக் வேற்றுகிரகவாசிகள் என கூறப்படுவதாகவும், இவை பார்க்க மனிதர்களை போன்றிருக்கும் வேற்றுகிரகவாசிகள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வகை ஏலியன்கள் உலகம் மற்றும் நமது எதிர்காலத்தில் அதிக அக்கறை கொண்டிருப்பவை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்கான்டிநாவியன் மற்றும் கருப்பு தோல் கொண்ட பிலெய்டன்கள் உயரமாகவும், ஒல்லியாகவும், பார்க்க அழகாகவும் இருக்கலாம் என்று கூறும் யுஎப்ஓ நிபுணர்கள், அவை பால் வழியின் வெளியே இருக்கும் லைரா எனும் கிரகத்தில் இறங்கி வந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்

 

Related posts: