ஒளிவேக இன்டர்நெட்!

Thursday, July 28th, 2016

பேஸ்புக் நிறுவனத்தின் அங்கமாக ‘கனெக்டிவிட்டி லேப்’ ஆராய்ச்சிக்குழு செயல்படுகிறது. இன்டர்நெட் தொழில்நுட்ப வேகத்தை அதிகரிப்பதன் மூலம் பேஸ்புக் பயன்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் ஆய்வுகளை இந்த அமைப்பு மேற்கொள்கிறது.

தற்போது இந்த ஆய்வுக்குழுவினர் கண்ணாடி இழைகள் வழியே தகவல் பரிமாற்றம் செய்வதைவிட ஒளித்துகள்கள் மீது தகவல்களை ஏற்றி அனுப்பினால் ஒளிவேக தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என்றும், அதற்கான சாத்தியக்கூறுகளை நெருங்கிவிட்டதாகவும் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

பிரீ பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேசன்’ எனப்படும் இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்தால் அதிக எண்ணிக்கையில் ‘டவர்’கள் தேவையின்றி, அதிவேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்யலாம். மலைப் பிரதேசங்களிலும் எளிதாக தகவல்பரிமாற்றத்தை சாத்தியமாக்கலாம்.

Related posts: