BMW நிறுவனத்தின் புதிய படைப்பு!
Wednesday, June 22nd, 2016
BMW நிறுவனமானது நுண்ணறிவுள்ள எதிர்கால காரொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த காரானது லண்டனில் இடம்பெற்ற கண்காட்சியின் போதே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ரொய்ஸ் என்னும் குறித்த காரே அவர்களால் இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காரானது மிகவும் அருமையான வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் 2040 இல் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அதற்கான கேள்வியானது தற்போதே அனைவரிடமும் நிலவி வருகின்றது.
இதேவேளை, எதிர்காலத்தில் அவர்கள் அறிமுகப்படுத்தவுள்ள தானியங்கி கார் மாதிரிகளும் இதன் போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப கார்களை நிர்மானிக்கும் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளது.

Related posts:
Google Play Storeல் புதிய தொழிநுட்பம் அறிமுகம்!
வருகின்றது நுளம்பினைக் கொல்லும் ரோபோ !
செயலிழந்தது யாழ் நிலா ரயில் சேவை - டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்று பொது முகாமையாளர் உறுத...
|
|
|


