வருகின்றது நுளம்பினைக் கொல்லும் ரோபோ !

Saturday, November 19th, 2016

பலரது வாழ்விலும் தூக்கத்தை கலைக்கும் ஒரு அம்சமாக நுளம்புகளின் தொல்லை காணப்படுகின்றது. அதுமட்டு மல்லாமல் பல்வேறு நோய்களை தோற்றுவிப்பதிலும் பிரதான பங்கு வகிக்கின்றன.

இப்படிப்பட்ட நுளம்புகளை அழிப்பதற்கு பாரம்பரிய முறைகள் முதல் நவீன முறைகள் வரை வெவ்வேறு நுட்பங்கள் கையாளப்படுகின்றன. எனினும் இவற்றுக்கெல்லாம் சில காலங்கள் வரை மட்டுமே நுளம்புகளின் தொல்லை அடங்குகின்றன. பின்னர் தமது சேஷ்டையை தொடர்கின்றன.

தற்போது இவ்வகையான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் முகமாக புதிய ரோபோ இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவிலுள்ள Shenzhen Robotics Association பொறியியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இவ் இயந்திரமானது நகரக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நகர்ந்து நுளம்புகளை தானாக பிடித்து லேசர் தொழில்நுட்பத்தின் ஊடாக அவற்றினை கொல்லக்கூடியதாக காணப்படுகின்றது.

nel copy

Related posts: