iOSஇலுள்ள Google Mapsஇல் Add A Pit Stop வசதி

Sunday, March 6th, 2016

நீண்ட நாட்களாக பயனர்களால் Google Mapsஇல் கேட்கப்பட்டுக்கொண்டிருந்த வசதியொன்றை கடந்த ஒக்டோபர் மாதத்தில் தேடல் ஜாம்பவானான கூகுள் இணைத்திருந்தது.

அதாவது, ஒரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும்போது இடையில் ஒரு நிறுத்தத்தை இணைப்பதாகும். அதாவது இந்த வசதியின் மூலம் நீங்கள், உங்கள் இறுதித் தரிப்பிடத்தை அடைய முன்னர், இடையில், எண்ணெய் நிரப்பும் நிலையமொன்றுக்கோ அல்லது உணவகமொன்றுக்கோ சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கூறப்பட்ட வசதி அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில், அன்ட்ரொயிட் சாதனங்களுக்கு மட்டுமே இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இவ்வசதியானது, கடந்த செவ்வாய்க்கிழமை (01) முதல், அப்பிளின் இயங்குதளமான iOSஇல் இயங்கும் அனைத்து சாதனங்களுக்கும் இவ்வசதி வந்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இது தவிர, Google Maps ஆனது பாதை வழிகாட்டலை வழங்கும் எந்தவொரு நாட்டிலும் இவ்வசதியை பெறக்கூடியதாக இருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில், Google Maps ஆனது நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் பாதை வழிகாட்டலை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்கூறப்பட்ட வசதியானது, கூகுளினால் நிர்வகிக்கப்படும் பாதை வழிகாட்டல் செயலியான Wazeஇல் சில காலத்துக்கு முன்னரே இருந்தபோதும் தற்போதே Google Mapsக்கு இவ்வசதி வந்துள்ளது

Related posts: