8GB RAM உடன் அறிமுகமாகும் முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி

Wednesday, February 14th, 2018

ஸ்மார்ட் கைப்பேசிகளில் பிரதான நினைவகமாக பயன்படுத்தப்படும் RAM இன் நினைவகம் அதிகரிக்கும்போது அதன் செயற்பாட்டு வேகமும் அதிகரிக்கும்.

இப்படியிருக்கையில் இதுவரை காலமும் வெளியான கைப்பேசிகளில் ஆகக்கூடுதலாக 6GB RAM தரப்பட்டிருந்தது.

ஆனால் முதன் முறையாக 8GB RAM உடன் Xiaomi Mi 7 எனும் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இக் கைப்பேசியானது 5.6 அங்குல அளவுடைய FHD+ தொடுதிரை, Snapdragon 845 Processor ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

இவற்றுடன் நீடித்து உழைக்கக்கூடிய 4,480 mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் விலை உட்பட கமெராக்களின் சிறப்பியல்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Related posts: