இலங்கையில் பாரிய வெளிச்சத்துடன் வீழ்ந்தது விண்கற்கள் அல்ல!

Sunday, October 29th, 2017

கடந்த 18 ஆம் திகதி பாரிய வெளிச்சத்துடன் வீழ்ந்த கற்துகள்கள் விண்கற்கள் இல்லையென கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மாத்தறை , பெலிஅத்த, கெட்டமான்ன, திக்வெல்ல மற்றும் வலஸ்கல ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கற்துகள்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

இதன்போது அவை விண்கற்கள் இல்லை என்ற விடயம் உறுதி செய்யப்பட்டதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வளிமண்டலவியல் மற்றும் கோள் மண்டல ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த கெமராக்களின் ஊடாக பதிவு செய்யப்பட்ட காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு, கற்துகள்கள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான ஆய்வுகளுக்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு, புதிய தொழில்நுட்ப உபகரணங்களைப் பொருத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்

Related posts: