6,000 ஆய்வுகளின் பின்னர் வெளியான அரிய தகவல்!

Friday, March 2nd, 2018

சோளன் தானியமானது பொதுவாக மனிதன் உட்பட ஏனைய வளர்ப்பு விலங்குகளுக்கும் சிறந்த உணவாக விளங்குகின்றது.

இருந்தும் சோளனானது மரபணு மாற்றம் செய்யப்பட்டும் பயிரிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவ் வகை சோளன்கள் மனிதர்களுக்கு சிறந்த உணவாக இருக்குமா என்ற கேள்விக்கு தற்போது சாதகமான பதில் கிடைத்துள்ளது.

இத்தாலியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த 21 வருடங்களாக சுமார் 6,000 வரையான ஆய்வுகளை பரீட்சித்து பார்த்துள்ளனர்.

இதன் அடிப்படையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு சோளன்களை மனிதர்கள் பயன்படுத்த முடியும் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ் வகை சோளன்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்ற கருத்து வலுப்பெற்றதன் பின்னணியிலேயே குறித்த ஆய்வு நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: