2050க்கு பின்னர் பவளப்பாறைகள் முற்றாக அழிந்துவிடும் ?

Sunday, October 2nd, 2016

உலகம் முழுவதும் பவளப்பாறைகள் அழிவின் விளம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன. இவைதான் கடலின் பாதுகாவலனாக காணப்படுகின்றது.

பவளப் பாறைகளில் பாலிப்ஸ் என்ற உயிரினம் காணப்படுகின்றன. இந்த உயிரினங்கள் முள்ளந்தண்டு அற்றவை. பாலிப்ஸ் உயிரினம் வாய்வழியாக உணவை உட்கொண்டு வாய் வழியாகவே அதன் கழிவையும் வெளியேற்றுகின்றன.

இவை உண்பதற்காக மட்டும் தலையை வெளியில் நீட்டி தாவர, சிறிய விலங்கின மிதவை நுண்ணுயிரிகளைத் தின்று வாழ்கின்றன.

பாலிப்ஸ் ஆனது கல்சியம் கார்பனேட்டால் ஆன ஒரு குடுவை போன்ற கூட்டிற்குள் இருக்கும் இந்த உயிரினம் தான் கடல் நீரிலுள்ள சுண்ணாம்பை எடுத்து பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன.

கடல் நீரிலுள்ள கல்சியம் ஆனது கல்சியம் கார்பனேட் ஆக மாறி கற்பாறைகள் மீது ஒட்டிக் கொள்வதால் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன.

இந்தப் பாலிப்ஸ் எனப்படுகிற உயிரினம் இறந்து விட்டால் பவளப்பாறைகள் உயிரிழந்து விடும் இதனால் அதன் கூடு கடினமான பொருளால் ஆன பவளப் பாறைத் திட்டுகளாக மாறி விடுகின்றன.

இவை சாதாரணமாக ஒரு மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மட்டும் 200 வகைகள் இருக்கும் இவற்றை கடினமானவை, மிருதுவானவை என இரு பிரிவுகளாகவும் பிரிக்கலாம்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

உலகின் அனைத்து சமுத்திரங்களிலும் பவளப்பாறைகள் உருவாவதில்லை. இவை உருவாவதற்கு விசேட சுற்றுச்சூழல் அவசியம் ஆகும்.

அவையாவன..

  • சமுத்திர நீரின் வெப்பநிலை 20°C – 24°C இற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
  • சமுத்திர நீரின் ஈரப்பதம் 30 சத வீதத்தில் இருந்து 35 சத வீதம் வரை இருக்க வேண்டும்.
  • சூரிய ஒளி சமுத்திரத்தின் ஆழ்பகுதி வரை நன்கு ஊடுருவ வேண்டும்.
  • கடல் அலை குறைவாக இருக்க வேண்டும்.

கடல்பகுதியின் தட்ப வெப்பத்தைப் பேணுவதிலும் பவளப்பாறைகளுக்கு மிக முக்கிய பங்குண்டு.சுண்ணாம்புக் கற்களால் ஆனவை என்றாலும் பவளப்பாறைகளும் உயிரினமாகவே கருதப்படுகின்றன கடலில் வாழும் ஏனைய நுண்ணுயிரிகளையே உணவாக உட்கொண்டு வளர்வதாலேயே இவற்றை விலங்கு அல்லது தாவரம் என்ற விதிக்குள் அடக்கியிருக்கிறது விஞ்ஞானம்

கடினமான வகை பவளப் பாறைகளில் மனிதமூளை வடிவம், மான்கொம்பு வடிவம்,மேஜை மற்றும் தட்டு வடிவம் ஆகியனவும் அடங்கும்.கடல் விசிறி உயிரினம் மிருதுவான பவளப்பாறை வகையை சேர்ந்தது. இவை பார்ப்பதற்கு செடிகள் அல்லது சிறு கொடிகள் போலவும் நீண்டும் காணப்படும்.பவளப் பாறைகளை மையமாக வைத்துத்தான் பலவிதமான வண்ணமீன்கள் கண்களைக் கவரும் வகையில் சுமார் 250க்கு மேற்பட்டவையும் ,மெல்லுடலிகள், கணுக்காலிகள் மற்றும் பாசிவகைகள் போன்றவையும் வளர்கின்றன.

பவளப் பாறைகளில் தான் பலவிதமான கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டுப்பிராணிகள் என்பவை அதிக அளவில் உயிர் வாழ்கின்றன.மேலும் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைத்து சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துகிறது.ஆனால் மனிதன் வளர்ச்சி என்ற பெயரில் புவியினை கெடுத்து எதுவெல்லாம் சுற்றுச்சூழலுக்கு உதவுமோ அதனையும் அழித்து வருகிறான்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

இந்த வரிசையில் இடம் பிடித்துள்ளது பவளப்பாறைகள்.உலக மீன் நல வாரியம் மற்றும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 25 இயற்கை பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து கடல் வளம் மற்றும் பவளப் பாறைகள் குறித்த ஆய்வை நடத்தின.

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்துகள்!

வானிலை மாறுபாடு பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், மனித இடர்பாடுகளும் காரணியாக இருப்பதை மறுக்க முடியாது.

தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது, பவளப் பாறைகளைப் பலரும் வெட்டி எடுப்பது, கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்ற பல காரணங்களால் இவை பெரிதும் பாதிக்கின்றன.இவை மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும், கடல் வளத்தைப் பாதுகாக்கவும் விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலுக்கடியில் வைத்து வருகின்றார்கள்.

இதே நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டுக்குள் 90 சதவீத பவளப்பாறைகள் அழிந்து விடும். 2050க்கு பிறகு பவளப்பாறைகள் இருந்ததற்கான சுவடு கூட இருக்காது.பவளப்பாறைகளை வாழ்வாதாரமாக கொண்டு கடலில் வாழும் ஏராளமான நுண்ணுயிர்களும் இதனால் அழிந்து விடும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றன.

இயற்கை வளங்களை பாதுகாப்பது நம்முடைய கடமையாகும். இயற்கை வளங்களின் அழிவானது எமது எதிர்கால சந்ததியினருக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

Related posts: