வியாழனில் எரிமலை: நாசா நிறுவனம் !

Tuesday, July 17th, 2018

வியாழன் கிரகத்தின் நிலவான Io வில் பாரிய எரிமலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசா நிறுவனத்தின் யூனோ விண்கலமே இந்த எரிமலையை படம்பிடித்துள்ளது.

இவ் விண்கலமானது வியாழன் கிரகத்திலிருந்து 470,000 கிலோ மீற்றர்கள் தொலைவில் இருந்து Jovian InfraRed Auroral Mapper (JIRAM) எனும் கருவி மூலம் குறித்த எரிமலையினைப் படம் பிடித்துள்ளது.எவ்வாறெனினும் Io நிலவில் எரிமலை கண்டுபிடிக்கப்படுவது இது முதன் முறை அல்ல.

சுமார் 150 வரையான செயற்படு நிலையில் உள்ள எரிமலைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அவற்றுள் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எரிமலையே மிகவும் வெப்பநிலை கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யூனோ விணகலமானது 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி விண்ணில் ஏவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: