2016 ஆண்டின் சிறந்த வார்த்தை!

உலகப் புகழ்ப்பெற்ற ஒக்ஸ்போர்ட் அகராதி 2016ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக post -truth என்னும் வார்த்தையை தேர்ந்தேடுத்துள்ளது. கடந்த 11 வருடங்களாக அந்தந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை ஒக்ஸ்போர்ட் அகராதி வெளியிட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த ஆண்டின் சர்வதேச வார்த்தையாக post -truth என்னும் வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளதாக ஒக்ஸ்போர்ட் அகராதி செய்தி வெளியிட்டுள்ளது. “பொதுக் கருத்து என்பது உண்மைகளைக் கடந்தும் தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளை சார்ந்து உருவாக்குவதில் அங்கம் வகிப்பது” என இந்த வார்த்தைக்கு ஒக்ஸ்போர்ட் அகராதி விளக்கம் கொடுத்துள்ளது. சர்வதேச சிறந்த வார்த்தையைப் பொறுத்தவரையில் இந்த அகராதியின் பிரிட்டன், அமரிக்க பதிப்புகள் சில நேரங்களில் வேறு வார்த்தைகளை தேர்ந்தெடுக்கும். ஆனால் இந்த ஆண்டு சொல்லி வைத்தது போல இரண்டு பதிப்புகளும் ஒரே வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியது போன்ற காரணங்களால் இந்த வார்த்தைப் பயன்பாடு உலக அளவில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக சர்வதேச வார்த்தை தெரிவித்துள்ளது.
Related posts:
தனது 100வது வருடத்தினை பூர்த்தி செய்கின்றது BMW!
Moto M இப்படித்தான் இருக்குமாம்! புகைப்படங்கள் வெளியாகின!
வியாழனை விட 13 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!
|
|