Moto M இப்படித்தான் இருக்குமாம்! புகைப்படங்கள் வெளியாகின!

Saturday, October 29th, 2016

 

தற்போது தயாரிப்பில் உள்ளதும் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Moto M செல்போனின் சிறப்புகள் தற்போது வெளிவந்துள்ளது Moto M ஆனது ஆண்ட்ராய்ட் 6.0 இயங்குதளத்தை கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் Snapdragon 625 processor உடன் Adreno 506 processor வசதியும் உள்ளது.

இந்த போனின் பின்பிறத்தில் கைரேகை ஸ்கேனர் அமைந்துள்ளது.

கமெராவை பொருத்தவரையில் பின்பக்கம் 16 மெகா பிக்சலும், முன்பக்கம் 5 மெகா பிக்சலும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த போனின் சீன பதிப்பு 4GB RAM உடனும், மற்ற பதிப்புகள் 3/4GB RAM உடனும் இருக்கும் என தெரிகிறது. மேலும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

முன்பக்க டிஸ்ப்லே வை பொருத்த வரையில் 5.5 இன்ச் மற்றும் 1080*1920 பிக்சல் ரிசல்யூசன் டிஸ்ப்லேவால் அமைக்கப்பட்டுள்ளது.

பேட்டரியை பொருத்தவரை 3000 எம்ஏஎச் பேட்டரியை இதில் பொருத்த முடியும். வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த Moto M போன் டிசம்பர் மாதத்திலிருந்து விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  lenovo-moto-m-leak-01-w782

Related posts: