1100 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்திற்கு வேற்று கிரகவாசிகள்!

Tuesday, July 5th, 2016

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்துள்ளனர்.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி  வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். என கூறி உள்ளார்.

வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் முன்னணி நிபுணர்கள் இது வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்ள ஏற்ற நேரம் என தெரிவித்து உள்ளனர். அதற்கான செயல்பாடுகளிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்

பிரபஞ்சத்தில் புத்தி கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளை கண்டறிய சீனா மிகபெரிய ரேடியோ  தொலை நோக்கியை அமைக்க திட்டமிட்டு உள்ளது. தென் மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் இந்த தொலை நோக்கியை அமைக்கிறது.

பிரபஞ்சத்தில் புத்தி கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளை கண்டறிய சீன மிகபெரிய ரேடியோ  தொலை நோக்கியை அமைக்க திட்டமிட்டு உள்ளது. தென் மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் இந்த தொலை நோக்கியை அமைக்கிறது.  இது சுமார் 500 மீட்டர் பரந்த  நுண்துளை உருண்டதொலை நோக்கி,

இந்த தொலை நோக்கி 1.2 பில்லியன் யுவான் இந்திய மதிப்பில் ரூ.18,836 கோடி  செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு  வானத்தின் கண் எனபுனை பெயர் சூட்டி உள்ளனர். இது 30 கால்பந்து மைதான அளவு கொண்டதாகும். இது விண்வெளியில் 11 மில்லியன் ஒளி ஆண்டுகள் அப்பாலும் பார்க்க கூடியது.  5 ஆண்டுகளுக்கு முன் இதனை அமைக்கும் பணி தொடங்கியது.தற்போது இதன் பணிகள் முடிவடைந்து செயல்படும் நிலையில் உள்ளது.

Related posts: