ஸ்மார்ட் சாதனங்களில் உளவு பார்க்கும் சாதனங்கள்!
Friday, June 28th, 2019
தற்போது ஸ்மார்ட் தொழில்நுட்பங்களே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன் ஒவ்வொரு ஸ்மார்ட் சாதனங்களிலும் இணைய வசதியை பயன்படுத்தக்கூடிய வாய்ப்பும் தரப்பட்டுள்ளது.
இதனால் இச் சாதனங்கள் ஊடாக ஒருவரை உளவு பார்க்கக்கூடிய சாத்தியங்களும் இலகுவாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஸ்மார்ட் சாதனங்கள் தம்மை உளவு பார்ப்பதாக 52 சதவீதமான இந்தியர்கள் நம்புவதாக குறித்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
YouGov மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை சைபர் பயங்கரவாதம் இரண்டாவது மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது என குறித்த நிறுவனமும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலகின் முதலாவது தனி ஒரு பகுதியைக் கொண்ட விண் ஓடம்!
பூமி நோக்கி வருகிறது பேரழிவு ஏற்படுத்தவல்ல இராட்சத கோள்!
பூமியை நெருங்கும் இராட்சத விண்கல் - எச்சரிக்கை விடுத்துள்ளது நாசா!
|
|
|


