வேகமாக உருகும் அண்டார்டிகாவின் பனிப்படலம்!
Friday, June 15th, 2018
அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறை கடந்த சில ஆண்டுகளாக வேகமாக உருகி வருகிறது என தெரிவிக்கப்படுகின்றது.
1992 ஆம் ஆண்டுமுதல் 3 டிரில்லியன் டன் பனி உருகியுள்ளதாக ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கடல் மட்டம் உயரவும் கடற்கரையோர பகுதிகள் கடும் பாதிப்படையவும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் 3 டிரில்லியன் டன் பனியில் ஐந்தில் இருமடங்கானது கடந்த 5 ஆண்டுகளில் உருகியுள்ளது இது உலக வெப்ப மயமாதலை கட்டுப்படுத்த விடுக்கப்பட்டுள்ள மற்றொரு எச்சரிக்கை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
2012ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 76 பில்லியன் டன் பனி உருகி வந்த நிலையில் தற்போது ஆண்டுக்கு 219 பில்லியன் என பனி உருகும் அளவு மும்மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழிற்சாலைகள் வெளியிடும் வெப்பத்தின் அளவு இதே நிலையில் நீடிக்கும் பட்சத்தில் இந்த நுாற்றாண்டு முடிவில் அங்குள்ள பனி மொத்தமும் உருகலாம் என அஞ்சப்படுகிறது.

Related posts:
|
|
|


