வெனிஸ் திரைப்பட விழாவில் தங்க விருதை வென்றது பிலிப்பைன்ஸ் திரைப்படம்!

Sunday, September 11th, 2016

பிலிப்பைன்ஸில் நடைபெறும் பழிவாங்கும் கதையான “த வுமென் கு லெப்ட்”  திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் உயரியதொரு விருதை வென்றிருக்கிறது.

கறுப்பு வெள்ளை வண்ணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பிலிப்பைன்ஸை சேர்ந்த இயக்குநர் லே டையஸால் இயக்கப்பட்ட “த வுமென் கு லெப்ட்” என்ற திரைப்படம் அநியாயமாக சிறைப்படுத்தப்படும் ஆசிரியை பற்றி விவரிக்கிறது.

விடுதலையான பின்னர் சிறைக்குள் தள்ள காரணமான அவருடைய முன்தைய காதலனுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய திட்டமிட்டு அந்த ஆசிரியை செயல்படுவது தான் இந்த திரைக்கதையின் சாராம்சம். பிலிப்பைன்ஸ் மக்கள் சந்தித்து வருகின்ற போராட்டங்களின் சாட்சியம் தான் இந்த திரைப்படம் என்று டையஸ் கூறுகிறார்.

பிரிட்டன் இயக்குநர் சேம் மென்டஸ் தலைமையிலான நடுவர் குழு முடிவு செய்கின்ற தங்க சிங்க விருது பெறுவதற்கு பிற 19 திரைப்படங்களை தோற்கடித்து இப்படம் முன்னலை பெற்றிருக்கிறது.

லா லா லாண்ட் (La La Land) திரப்படத்தில் அளித்த பங்களிப்புக்காக சிறந்த நடிகை விருது எம்மா ஸ்டோனுக்கும், த டிஸ்டிங்குஸ்ட் சிட்டிசன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது ஆஸ்கர் மார்டின்ஸூக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.

140818152934_lav_diaz_512x288_non_nocredit

160911055643_director_lav_diaz_poses_with_actress_charo_santos-concio_and_actor_john_lloyd_cruz__624x351_reuters

Related posts: