விலை உயர்ந்த காரை முதலாளிக்கு பரிசளித்த ஊழியர்கள்!

Monday, July 18th, 2016

அமெரிக்காவில் தனியார் நிறுவன முதலாளிக்கு அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஒன்றிணைந்து விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

வாஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரில் அமைந்துள்ளது கிராவிட்டி எனும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தமது ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஆண்டு ஊதியமாக ரூ.47 லட்சம் என முடிவு செய்து தீர்மானம் வெளியிட்டார்.

இதனால் பெரும்பாலான ஊழியர்கள் பலனடைந்துள்ளதுடன் ஏற்றத்தாழ்வுகள் மறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் நிறுவனருமான டான் ப்ரைஸ் என்பவரது ஊதியமும் ரூ.47 லட்சம் என மாற்றிக்கொண்டது ஊழியர்களை வியப்படைய வைத்துள்ளது.

இதனையடுத்து நிறுவனரின் தாராள மனதுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு ஊழியர்கள் ஒன்றிணைந்து அவருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனர்.

டெஸ்லா நிறுவனத்தின் புத்தம் புது மொடலான கார் ஒன்றை தெரிவு செய்து அந்த நிறுவனருக்கு பிடித்தமான வண்ணத்தில் வாங்கி வழங்கியுள்ளனர்.

ஊழியர்களின் இந்த பரிசால் இன்ப அதிர்ச்சியடைந்த டான் ப்ரைஸ் அவர்களுக்கு எப்படி நன்றி கூறுவேன் என உணர்ச்சி மேலோங்க தெரிவித்துள்ளார். தங்கள் முதலாளிக்கு கார் பரிசளிப்பதை முடிவு செய்த ஊழியர்கள் அதன் பொருட்டு கடந்த 6 மாதங்களாக பணத்தை சேமித்து வந்துள்ளனர்.

அந்த நிறுவனத்தின் 130 ஊழியர்களும் ஒன்றிணைந்து இந்த அரிய பரிசை தங்கள் முதலாளிக்கு வழங்கி மகிழ்ந்துள்ளனர்.டெஸ்லா நிறுவனத்தின் புது மொடல் கார்களின் விலை ரூ.47 லட்சத்தில் இருந்து துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: