விமானப் பயணச் சீட்டிற்கு பதிலாக பரிசோதிக்கப்படும் தொழில்நுட்பம்!

Tuesday, June 6th, 2017

தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானப் பயணச் சீட்டிற்கு பதிலாக நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்த அமெரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி தமது பயணத்திற்கான பதிவுகளை மேற்கொள்ளும்போது பயணிகள் தமது கைவிரல் அடையாளம் அல்லது முக அடையாளத்தினை கணணியில் பதிவு செய்ய வேண்டும்.இத் தகவல்கள் தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டு விமான நிலையம் மற்றும் விமானத்தில் பரிசோதிக்கப்படும்போது பயணிகளின் கைவிரல் அடையாளம் அல்லது முக அடையாளம் பயன்படுத்தப்படும். இதன் மூலம் பயணத்திற்கான முற்பதிவு உட்பட ஏனைய தகவல்களையும் உறுதி செய்துகொள்ள முடியும்.

இந்த பயோமெட்டிக் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் ஜெட்ப்ளூ ஏர்வேய்ஸ் நிறுவனமும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. எனினும் டெல்லா நிறுவனமே இதற்கான தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பம் வெற்றியளிக்கும் பட்சத்தில் ஆரம்பத்தில் தேசிய விமான நிலையங்களில் மட்டுமே பாவனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: