விக்டோரியா அரசியின் கிரீடத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல தடை!

Monday, August 29th, 2016

விக்டோரியா அரசிக்கு சொந்தமான நீலக்கல் மாணிக்கம் மற்றும் வைரம் பதித்த கிரீடம் ஒன்றை ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிகத் தடையை பிரிட்டன் அரசு விதித்திருக்கிறது.

இதற்கு கேட்கப்படும் 6.5 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஒரு பிரிட்டிஷ் நபர் கொடுத்து வாங்காத வரை, 1840 ஆம் ஆண்டு அவர்களின் திருமணத்திற்காக இளவரசர் ஆல்பிரட் வடிவமைத்த இந்த வைரக் கிரிடம் வெளிநாட்டுக்கு போய்விட வாய்ப்பு உள்ளது.

இந்தக் கிரீடமும், இந்தக் கிரீடத்திற்கு இணையான, இளமையான விக்டோரியா அரசியின் அதிகாரப்பூர்வ புகழ்பெற்ற உருவம் பொறிக்கப்பட்ட உடையில் சொருகப்படும் ஊசி என இரண்டு ஆபரணங்களும் தனிச்சிறப்பு மிக்கவை.

பிரிட்டனின் தேசிய வாழ்க்கையோடு மிகவும் நெருங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் இந்த அணிகலன் பிரிட்டனில் தான் இருக்க வேண்டும் என்று கலை கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

Related posts: