மணிக்கு 1200 கிமீ வேகம்: ஹைப்பர்லூப் போக்குவரத்துக் கட்டமைப்பை துபாய் உருவாக்குகிறது !

Thursday, August 11th, 2016

 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டமைப்பில் உள்ள முக்கிய நகரமான ஃபியூஜைராவிற்கு ஹைப்பர்லூப் போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆய்வுகளில் துபாய் இறங்கியிருக்கிறது.

துபாய் – ஃபியூஜைரா நகருக்கு இடையிலான 105 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 10 நிமிடங்களில் கடப்பதற்கு ஏதுவாக இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த துபாய் ஆர்வம் கொண்டுள்ளது.

தற்போது இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் இரண்டு மணி நேரமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் ஹைப்பர்லூப் அல்லது மணிக்கு 1,200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதற்கான போக்குவரத்து கட்டமைப்பை செயற்பாட்டிற்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது துபாய்.

நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் இந்த ஹைப்பர்லூப் கட்டமைப்பு பாதிக்கப்படாது எனவும் அனைத்து செயற்பாடுகளும் தானியங்கி முறையில் நடக்கும் எனவும் இதனால், மனிதத் தவறால் ஏற்படும் விபத்துக்கள் தவிர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: