வளையும் தொடுதிரை – Samsung-ன் புதிய ஸ்மார்ட் போன்!
Thursday, June 9th, 2016
மடக்கக்கூடிய மற்றும் வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரையை கொண்ட ஸ்மார்ட் போன்களை Samsung அடுத்த வருடம் வெளியிட உள்ளது.
சமீபத்திய தகவலின் படி, முன்னணி மொபைல் நிறுவனமான Samsung புதிய மைல்கல்லாக வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரையைக் கொண்ட 2 ஸ்மார்ட் போன்களை அடுத்த வருடம் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு மொபைல்களில் ஒன்று இரண்டாக மடித்துக் கொள்ளும் வகையிலும், மற்றொன்று தொடுதிரை நன்றாக வளைந்து கொடுக்கும் படியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இரு போன்களுமே 5 இன்ஞ் OLED தொடுதிரையை கொண்டுள்ளன. இவை வளைந்து கொடுக்கும் போது 8 இன்ஞ் வரை அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பயனர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட் போன்கள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடக்கும் Mobile World Congress 2017ல் அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
புதிய வகை ட்ரான்சிஸ்டரை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்!
மூன்றரை மாதங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது கோள்மண்டலம்!
விழித்திருக்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பகுதியை கையடக்க தொலைபேசியில் விரயமாக்கும் மக்கள்!
|
|
|


