விழித்திருக்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பகுதியை கையடக்க தொலைபேசியில் விரயமாக்கும் மக்கள்!

Friday, January 28th, 2022

நாளொன்றில் சராசரியாக 4 மணித்தியாலங்கள் 48 நிமிடங்களை மக்கள் தமது கையடக்க தொலைபேசியில் செலவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

App Annie எனப்படும் செயலி கண்காணிப்பு நிறுவனத்தை (App monitoring firm) மேற்கோள்காட்டி இந்த தரவுகள் வௌியிடப்பட்டுள்ளன.

2020 ஆம் ஆண்டில் பிரித்தானிய ஒழுங்குபடுத்துநரான Ofcom இதேயளவான நேரத்தையே மக்கள் செலவிடுவதாக தெரிவித்திருந்தது. இருப்பினும், அதன் ஆய்வுகளில் தொலைக்காட்சி பார்ப்பதும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

2021 ஆம் ஆண்டில் 230 பில்லியன் தடவைகள் தொலைபேசி செயலிகள் தரவிறக்கப்பட்டுள்ளதாகவும் 170 பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளதாகவும் App Annie நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் அதிக தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக TikTok அமைந்துள்ளது.

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 90 வீதத்திற்கும் அதிகமான நேரத்தை பாவனையாளர்கள் TikTok-இல் செலவிட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் இரண்டாம் பாதியில், TikTok-இல் மாதாந்தம் செயற்பாட்டில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை 1.5 பில்லியனைத் தாண்டிவிடும் என்று கண்காணிப்பு நிறுவனம் கணித்துள்ளது.

கையடக்க தொலைபேசி பாவனையில் செலவழித்த சராசரி நேரம் 4 மணித்தியாலங்கள் 48 நிமிடங்கள் ஆகும். இது 2019 ஆம் ஆண்டை விட 30% அதிகம் என்று App Annie-இன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது இந்தியா, துருக்கி, அமெரிக்கா, ஜப்பான், மெக்ஸிக்கோ, சிங்கப்பூர் மற்றும் கனடா உட்பட 10 நாடுகளின் சந்தைகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது.

பிரேஸில், இந்தோனேஷியா மற்றும் தென் கொரியாவில் மக்கள் நாளொன்றில் 5 மணித்தியாலங்களை தொலைபேசி செயலிகளில் செலவிடுகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.

00

Related posts: