வரும் 9ஆம் திகதி சூரிய கிரகணம்…!
Monday, March 7th, 2016
சூரிய கிரகணம் 9–ம் திகதி (புதன்கிழமை) காலை ஏற்படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா, போர்னியோ, சுலவேசி மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இதனை 100 சதவீதம் தெளிவாக பார்க்க முடியும்.
இந்திய நேரப்படி அன்று காலை 4.49 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் பகுதி சூரிய கிரகணமாகத்தான் பார்க்க முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னையில் 9–ம் திகதி காலை 6.20 மணிக்கு சூரியன் உதயமாகும். காலை 6.22 மணிக்கு தொடங்கி, 6.48 மணியுடன் சூரிய கிரகணம் முடிகிறது. அதாவது 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்.
இதே போல் டெல்லி, கொல்கத்தா உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் சூரிய கிரகணத்தை காண முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
மிகவும் சலிப்பான வேலையை கொடுத்த நிறுவன உரிமையாளரிடம் இழப்பீடு கோரி ஊழியர் ஒருவர் வழக்கு பதிவு!
சில செய்திகளைத் தவிர்க்கும் கருவியை பேஸ்புக் உருவாக்கியுள்ளதா?
இதை உண்டால் சந்ததியே பலியாகும்: எச்சரிக்கை!
|
|
|


