வரவேற்பாளர் வேலை ஒன்றுக்கு 10,000 விண்ணப்பங்கள்!
Thursday, October 27th, 2016
சீனாவில் வரவேற்பாளர் வேலை ஒன்றுக்காக சுமார் 10,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். சீனாவில் அதிக போட்டி கொண்ட சிவில் சேவை ஆட்சேர்ப்பு ஆண்டுப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே இந்த விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இதில் “சீன ஜனநாயக லீக் பொது வரவேற்பு ஊழியர்” வேலைக்கே அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஒரு வேலைக்கு 9,837 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சீனாவின் சிறுபான்மை அரசியல் கட்சிகளில் ஒன்றான ஜனநாயக லீக், மிக குறைந்த அதிகாரங்கள் கொண்டது என்பதால் மதிப்பு மிக்க வேலை வாய்ப்பாக பார்க்கப்படுவதில்லை.
எனினும் சீனாவில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அரச திணைக்களங்களில் பணி அமர்த்துவதில் அதிக கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருப்பதோடு உயர்ந்த கல்வித் தகைமை மற்றும் பிரத்தியே திறன்கள் எதிர்பார்ப்படுகின்றன.
இந்நிலையில் குறைவான கல்வித் தகைமை மற்றும் இலகுவான பணி போன்ற விடயங்கள் குறித்த வரவேற்பாளர் பணி அதிகம் பேரை கவரக் காரணம் என்று பீஜிங் டெய்லி பத்திரிகை செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.4 மில்லியன் பேர் சிவில் சேவை பரீட்சையில் பங்கேற்பதோடு ஒவ்வொரு வேலைக்கும் சராசரியாக 49.5 வீத விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

Related posts:
|
|
|


