மனிதனுக்கு இறப்பு இல்லை!

Thursday, August 4th, 2016

மரணம் என்பது அனைவருக்கும் நிச்சயிக்கப்பட்ட விடயம். எனினும் எதிர்கால உலகின் மனிதர்களுக்கு மரணம் நிச்சயமில்லை இறந்த பின்னரும் வாழலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஒவ்வோர் நாட்டிலும் காணப்படும் சூழ்நிலை, மருத்துவ வசதிகள் போன்ற காரணங்களின் அடிப்படையில் உயிர்வாழும் காலங்களின் சராசரிகளும் மாறுபட்டே காணப்படுகின்றன. இன்னும் ஒரு 30 ஆண்டுகளில் நாம் நமது மூளையில் பதிந்திருக்கும் அனைத்தையும் ஒரு கணணியில் பதிவேற்றிவிட முடியும் என கூகுள் நிறுவனத்தில் பொறியியல் பகுதிக்குப் பொறுப்பாக இருக்கும் ரேய் குர்ஸ்வைல் என்பவர் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த காலங்களில் கூறிய விடயங்கள் நிறைவேறியுள்ளமை காரணமாக இது அறிவியல் புனைவு அல்ல என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், செயற்கை மனித மூளையை உருவாக்குவதற்கு தற்போது இருக்கும் கணினிகள் போதாது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், கணினியியலில் மூர்ஸ் லாவ் (Moore’s law) எனப்படும் ஓர் சட்டம் காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் கணணிகளின் கணக்கீட்டு ஆற்றல் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் இரு மடங்காக அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்தச் சட்டத்தை அடிப்படையாக வைத்தே ரேய் குர்ஸ்வைல் அவர்கள் 30 வருடங்களில் கணணிகளுடன் ஒரு செயற்கை மனித மூளையைக் கட்டாயம் உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார். இது சாத்தியப்பட்டு விடுமாயின் எதிர்கால மனிதனுக்கு இறப்பு இல்லை. மனித உடல் இறந்துவிட்டாலும், நினைவுகள், கனவுகள் கொண்ட ஒரு டிஜிட்டல் செயற்கை வாழ்க்கையைக் கணினியினூடாக தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முன்னைய காலத்தில் சாத்தியமில்லை என கூறப்பட்ட விடயங்கள், இன்று சாத்தியப்படுவதும் நிறைவேறியுள்ளமையும் அவதானிக்கக்கூடிய ஒன்றே.

Related posts: