104 செயற்கைகோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணிற்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்!

Friday, February 3rd, 2017
104 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-37 ராக்கெட்டை விண்ணிற்கு அனுப்பி உலக சாதனையைப் படைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி சி-37 என்ற ராக்கெட் மூலம் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட் பிப்ரவரி 15ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இதில் சமீபத்திய பதிப்பான நானோ செயற்கைக்கோள் உட்பட 101 செயற்கைகோள்கள், வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் ஆகும். மற்றும் கார்டூசாட் தொடர்–2டி உட்பட மீதமுள்ள மூன்றும் இந்திய செயற்கைக்கோள்கள் ஆகும்.

கார்டூசாட் தொடர்–2டி செயற்க்கோளில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய நோக்கங்களை துல்லியமாக கணிக்கும் அப்ளிக்கேஷனுடன் உயர் தீர்மானம் கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம், இஸ்ரோ நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 80 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் 83 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது 20 செயற்கை கோள்கள் கூடுதலாக சேர்த்து, 101 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் 104 செயற்கைகோள்களை பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் விண்ணில் செலுத்தி சாதனை படைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.  பி.எஸ்.எல்.வி சி-37 ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களுடன் ஏவப்படுவது விளம்பரத்திற்காகவோ அல்லது சாதனைக்காகவோ இல்லை. இதன் மூலம் குறைந்த செலவில் அதிக செயற்கைகோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணி்ற்கு அனுப்பும் முயற்சி ஆகும்.

2115102.nasa

Related posts: