வட்ஸ் எப் பயனாளிகளுக்கு வருகிறது புதிய வசதி!

ஒரு நாளைக்கு சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தும் பிரபல குறுந்தகவல் பரிமாற்றி செயலியான வட்ஸ்எப்பில் Group calling வசதியை விரைவில் அறிமுகப்படுத்தஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய இளையோரை வட்ஸ் எப்பில் குரூப் சேட்டிங், எமோஜி வசதி, வொய்ஸ் செட்டிங் என பல வசதிகள் கவர்ந்து வருகின்றது.
அந்த வகையில் தற்போது வட்ஸ் எப் நிறுவனம் Group calling வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. அதில் மொத்தமாக 3 நபர்கள் கலந்துரையாடலாம். இதேவேளை அதற்கான சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சோதனை விரைவில் வெற்றி அடைந்து என்ரோய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
Related posts:
கூகுளை தோற்கடிக்குமா ஆப்பிளின் திட்டம்!
கண்களை கவரும் அசாதாரண பாரிய பனிப்பாறை!
இலங்கையின் முதலாவது செய்மதி விண்ணில் பாய்கிறது!
|
|