கூகுள் தேடுதல் வசதியில் ஓர் அதிரடி மாற்றம்!

Monday, October 17th, 2016

இணையத்தளங்களை தேடித் தருவதில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனத்துக்கு போட்டியாக இதுவரை எந்த நிறுவனமும் உருவாகவில்லை.இதற்கு காரணம் விரைவான மற்றும் இலகுவான முறையில் தேடுதல் வசதியை அளிப்பதாகும்.

இவ்வாறு இணைய தேடலில் ஒன் மேன் ஷோ காட்டிக்கொண்டிருக்கும் கூகுள் நிறுவனம் தற்போது புதிய மாற்றம் ஒன்றினைக் கொண்டுவரவுள்ளது.அதாவது மொபைல் சாதனங்களிலான தேடுதலில் பல மேம்படுத்தல்களை செய்யவுள்ளது.

இதன்படி டெக்ஸ்டாப் கணணிகளைப் பயன்படுத்தி தேடும்போது கிடைக்கப்பெறும் பெறுதிகளை விடவும் அதிகளவான பெறுதிகள் கிடைக்கக்கூடிய வகையில் மொபைல் தேடலை மேம்படுத்தவுள்ளது.

இதற்கு காரணம் சம காலத்தில் அதிகளவானவர்கள் டெக்ஸ்டாப் மற்றும் லேப்டொப் கணணிகளை பயன்படுத்துவதைக் காட்டிலும் மொபைல் சாதனங்களை அதிகளவு பயன்படுத்துகின்றமை ஆகும்.அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்குள் அறிமுகம் செய்யப்படவுள்ள இவ் வசதி தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

GOOGLE__1338298f

Related posts: