சூரியனுக்கு செல்லும் கார் – நாசாவின் அடுத்த திட்டம்!

Tuesday, July 24th, 2018

சூரியனுக்கு மிக அருகில் செல்லும் வகையில் சாட்டிலைட் ஒன்றை நாசா அடுத்த மாதம் அனுப்ப உள்ளது. இதற்கான அனைத்து சோதனைகளிலும் வென்று இருக்கிறது.

சன்ஷைன், 2007ல் வந்த ஒரு விண்வெளி ஹாலிவுட் திரைப்படம். சூரியனின் சக்தி மொத்தமாக தீர்ந்து போனதால் உலகம் அழியும் நிலையில் இருக்கும். இதனால் சூரியனில் அணுகுண்டு வீசி மீண்டும் அதை தீ பற்றி எரிய வைக்க திட்டமிட்டு, உலக நாடுகள் விண்வெளி வீரர்களை சூரியனுக்கு அருகில் அனுப்பும்.

அவர்கள் அதை செய்தார்களா இல்லையா என்பதே கதை. ஆனால் இப்போது நாசா அதை உண்மையாக செய்ய உள்ளது. ஆனால் அணுகுண்டு வீசாமல் சூரியனை ஆராய்ச்சி மட்டும் செய்ய இருக்கிறது.

இந்த நிலையில் நாசா இப்போது உண்மையாகவே, சூரியனுக்கு சாட்டிலைட் ஒன்றை அனுப்புகிறது. பார்க்கர் சோலர் புரோப் என்று அழைக்கப்படும் இந்த சாட்டிலைட் போன்ற சாதனம், சூரியனை ஆராய்ச்சி செய்ய இருக்கிறது. மனிதர்கள் கண்டுபிடித்ததிலேயே சூரியனுக்கு மிக அருகில் செல்ல போகும் சாதனம் இதுதான். வரும் ஆகஸ்ட் 6ம் தேதிக்கு இந்த இந்த சாட்டிலைட் ஏவப்பட்ட இருக்கிறது.

இது சூரியனுக்கு மிக அருகில் செல்ல ஒரு வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். சன்ஷைன் படத்தில் இருப்பது போலவே, இந்த சாட்டிலைட்டின் முன் பாகத்தில் பெரிய முகப்பு போன்ற, திரையாக செயல்பாடு ஷீல்ட் ஒன்று இருக்கும். இது சூரியனின் ஒளியை உள்ளே அனுமதிக்காது. இதனால், சாட்டிலைட்டின் உள்பாகத்தில், பூமியில் நிலவும் வெப்பநிலையே நிலவும். இதனால் ஆராய்ச்சி செய்ய எளிதாக இருக்கும்.

செவ்வாய் கிரகத்திற்கு செல்வதை விட 55 மடங்கு அதிக சக்தியை பயன்படுத்தினால் மட்டுமே இந்த சாட்டிலைட்டை சூரியனுக்கு அருகில் கொண்டு செல்ல முடியும். இதற்காக டெல்டா ஐவி என்ற பெரிய ராக்கெட்டை கண்டுபிடித்து இருக்கிறார்கள். உலகிலேயே அதிக சக்தி கொண்ட ராக்கெட் இதுதான் என்று கூறப்படுகிறது.

இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், நாசா இதன் பயன்பாட்டை மிகவும் ரகசியமாக வைத்து இருக்கிறது. சூரியனுக்கு மிக அருகாமையில் சென்று அதை ஆராய்ச்சி செய்ய முடிவு எடுத்து இருக்கிறோம் என்று கூறியது. ஆனால், உண்மையான காரணம் இன்னும் சொல்லப்படவில்லை. ஆனால் என்ன காரணமாக இருந்தாலும், இந்த ஆராய்ச்சி உலக வரலாற்றில் பெரிய மைல் கல்லாக இருக்க போகிறது.

Related posts: