லண்டனில் பொப்பி மலர் கண்காட்சி மகாராணியாரால் அங்குரார்ப்பணம்!

இலண்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான செல்ஸி மலர் கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான கைகளால் தயாரிக்கப்பட்ட பொப்பி மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
மேற்படி கண்காட்சியானது பிரித்தானிய எலிஸபெத் மகாராணியாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியையொட்டி லண்டனின் ரோயல் மருத்துவமனைக்கு முன்பாக 300,000 சிவப்பு பொப்பி மலர்களை உள்ளடக்கிய இராட்சத செங்கம்பள விரிப்பு விரிக்கப்பட்டது
அதேசமயம் இந்தக் கண்காட்சியை முன்னிட்டு லண் டன் கோபுரத்தைச் சுற்றி பீங்கானால் தயாரிக்கப்பட்ட சுமார் 900,000 பொப்பி மலர்கள் காட்சிப்படுத்தப்பட் டன
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வடிவமைப்பாளர்களான பிலிப் ஜோன்ஸன் மற்றும் அதே நாட்டைச் சேர்ந்த லைன் பெரி மற்றும் மார்க்கரெட் நைட் ஆகியோ ரால் இந்தக் காட்சியலங்காரம் வடிவமைக்கப்பட்டிருந் தமை குறிப்பிடத்தக்கது. தைக்கப்பட்ட பொப்பி மலர் களை உள்ளடக்கிய விரிப்பு எதிர்வரும் 28 ஆம் திகதிக் குப் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப் படவுள்ளது
Related posts:
|
|