பூமியை கடந்து செல்லவிருக்கும் விண்கல்! !

Saturday, September 14th, 2019


இன்று பூமிக்கு மிகவும் அருகில் விண்கல் ஒன்று கடந்து செல்லவுள்ளதாக அமெரிக்க நாசா விண்வெளி முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

951 மீற்றருக்கும் 2133 மீற்றருக்கும் இடைப்பட்ட அளவுடைய 2000 கியூ.டபிள்யூ.7 என்ற மேற்படி விண்கல் இன்றைய தினம் பூமியிலிருந்து சுமார் 14000 மைல் தொலைவில் கடந்து செல்லவுள்ளது.

இந்த விண்கல் இதுவரை பூமியிலிருந்து 3.3 மில்லியன் மைல் தொலைவு வரையான தூரத்தில் கடந்து சென்றுள்ள நிலையில் இது அந்த விண்கல் பூமியை மிகவும் நெருங்கிக் கடந்து செல்லும் சம்பவமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய விண்வெளி முகவர் நிலையமானது தற்போதுள்ள விண்கற்களில் 878 விண்கற்கள் எதிர்வரும் 100 ஆண்டுகளுக்குள் பூமியின் மீது மோதும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. அந்த விண்கற்களில் மிகச் சிறிய விண்கல்லொன்று மோதும் பட்சத்தில் பாரிய அழிவை ஏற்படுத்தும் என அந்த முகவர் நிலையம் கூறுகிறது.

மேற்படி விண்கற்களின் அபாயம் குறித்து ஆராய்ந்து அது தொடர்பில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இலக்கில் ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்கா உட்பட 6 நாடுகளைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு முகவர் நிலையங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் விண்வெளி விவகார அலுவலகமும் எதிர்வரும் 15ம், 16ம் திகதிகளில் ஜேர்மனியின் டார்ம்ரட் நகரில் இடம்பெறவுள்ள பயிற்சிப் பட்டறையில் கலந்துரையாடவுள்ளன.

Related posts: