யு-டியூப்பை தோற்கடிக்க வருது ’பேஸ்புக் வாட்ச் வீடியோ’
Sunday, November 26th, 2017
பேஸ்புக் நிறுவனம் புதிய வீடியோ சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமாக பேஸ்புக் பெயர் பெற்றுள்ளது.
இது யு-டியூப் போன்றே வீடியோக்களை பார்க்க, புதிய சேவையை கொண்டு வருகிறது. இதற்கு ’பேஸ்புக் வீடியோ வாட்ச்’ என்று பெயர்.இந்த சேவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யு-டியூப் சேவையைப் போன்று, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை பேஸ்புக் ஆப், பேஸ்புக் டெஸ்க்டாப் வெர்ஷனில் பார்க்க முடியும்.உலகெங்கும் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள், லைவ் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.
Related posts:
சூரியனை தாக்கிய மர்ம கிரகம் - ஏலியன்ஸா?
நட்சத்திரத்திலிருந்து வெளியாகும் வினோத சமிக்ஞை!
பிரித்தானியாவின் களை கொல்லியால் இலங்கை, இந்தியாவில் ஆயிரக்கணக்கான மரணங்கள் - அதிர்ச்சித்தகவலை அம்பலப...
|
|
|


