அண்டவெளியை சுத்தம் செய்ய தயாராகும் ரோபோக்கள்!

Saturday, October 21st, 2017

விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள் உட்பட பல பொருட்களின் கழிவுகள் அண்டவெளியில் காணப்படுகின்றன.இவற்றினை சுத்தம் செய்து அகற்றுவதற்கு ரோபோக்களை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

இந்த திடீர் முடிவுக்கு முக்கிய காரணமாக காணப்படுவது சீனாவின் Tiangong-1 விண்கலமாகும்.சுமார் 6 வருடங்களாக விண்வெளியில் பணியாற்றிவந்த குறித்த விண்கலம் ஆயுட்காலம் முடிந்துள்ள நிலையில் தற்போது பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது.9.3 தொன்கள் எடையுள்ள இந்த விண்கலம் பூமியில் விழ முன்னர் எரிந்து சாம்பலாக வேண்டும்.இல்லாவிட்டால் பாரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.இதேபோன்று அமெரிக்க இராணுவத்தினால் ஆய்விற்காக சுமார் 480 மில்லியன் ஊசி போன்ற அன்டனாக்கள் பூமியின் ஒழுக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளன.இவற்றினையும் அகற்ற வேண்டிய அவசியம் காணப்படுகின்றது . இதற்காகவே ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

Related posts: