மெசேஜ் அப்பிளிக்கேஷனை உருவாக்கும் அமேஷான்!

Wednesday, July 19th, 2017

பேஸ்புக், கூகுள், மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தமது பயனர்களுக்கு சொந்தமாக மெசேஜ் அப்பிளிக்கேஷனை உருவாக்கியுள்ளன. இவை மிகவும் பிரபல்யம் அடைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் உலகின் மிகப்பிரம்மாண்டமான ஒன்லைன் வியாபார நிறுவனமான அமேஷான் நிறுவனமும் சொந்தமாக மெசேஜ் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அப்பிளிக்கேஷன் ஆனது அன்ரோயிட், iOS சாதனங்கள் உட்பட டெக்ஸ்டாப் கணனிகளிலும் செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

இதில் குரல்வழி அழைப்பு, வீடியோ அழைப்பு, செய்தி குறிமுறையாக்கம் (Encryption), Group Chat உட்பட மேலும் பல வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். இதேவேளை அமேஷான் நிறுவனம் குறித்த அப்பிளிக்கேஷனை உருவாக்குவதன் பிரதான நோக்கம் தமது வியாபாரத்தினை மேம்படுத்தும் உத்தியாக பார்க்கப்படுகின்றது.

Related posts: