நூற்றாண்டின் பின் ஆரம்பிக்கப்பட்ட பாரிய ரயில் சேவை!

Thursday, June 1st, 2017

கென்யாவின் துறைமுக நகரான மொம்பாசாவிற்கும் தலைநகர் நைரோபியிற்கும் இடையிலான புதிய பாரிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

3.2 பில்லியன் அமெரிக்க டொலர் சீன நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவையானது, கென்யா சுதந்திரமடைந்த பின்னர் அங்கு ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டமாகக் கருதப்படுகிறது.

சீன தொழில்நுட்பத்துடன் கூடிய குறித்த ரயில் சேவைக்கான கட்டட நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கு சுமார் மூன்றரை ஆண்டுகள் கடந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.தென் சூடான், கொங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் புருண்டி ஆகிய பகுதிகளை மொம்பாசாவுடன் இணைக்கும் வகையில் இந்த ரயில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு நூற்றாண்டின் பின்னர் கென்யாவில் அமைக்கப்பட்ட பாரிய ரயில் சேவை கட்டமைப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: