மீள்பயன்படுத்தப்படும் ஆளில்லா விண்கலன்களை இந்தியா ஏவியது!
Monday, May 23rd, 2016
ஆளில்லா மாதிரி விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இந்திய விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.
இறக்கைகள் கொண்ட அந்த விமானம், ஆறில் ஒன்று என்ற அளவில் சுருக்கப்பட்டு சோதனைக்காக தயாரிக்கப்படவிருக்கும் பல கலன்களில் முதலாவதாகும்.
2030 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா முழு அளவிலான மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தை தயாரிக்க முடியும் என நம்புகிறது.
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அதிக முதலீடுகளை செய்துள்ளது. மேலும், இந்த துறையில் சீனா உட்பட வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வளர வேண்டும் என்ற உறுதியை கொண்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன், செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பிய விண்கலம் அதன் விண்வெளி துறை முயற்சிகளில் உச்சமாக கருதப்படுகிறது.
.
Related posts:
யாகூ நிறுவனத்தை கொள்ளவனவு செய்ய DMGT பேச்சு வார்த்தை!
விரைவில் வருகிறது Bluetooth 5!
உலகின் மிக வயதான ஆமை மரணம்!
|
|
|


