மீண்டும் வருகின்றது ஆர்குட் சமூக வலைத்தளம்!

Sunday, August 7th, 2016

சமூக வலைதளங்களின் வரிசையில் முதலில் களமிறங்கி, சமகால நிறுவனங்களுடன் ஈடுகொடுக்க முடியாமல் மூடப்பட்ட ஆர்குட் சமூக வலைதளம் மீண்டும் வர உள்ளது.

ஒருகாலத்தில் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வந்த ஆர்குட் சமூக வலைதளம் மீண்டும் வருவது எத்தனை பேருக்கு மகிழ்ச்சி தரும் என்பது தெரியாது. ஆனால் மீண்டும் வரப்போவது ஆர்குட் சமூக வலைதளம் அல்ல அதனை உருவாக்கிய ஆர்குட் பைகோட்டன் என்பவரின் புதிய சமூக வலைதளமான ஹலோ (Hello) தான்.

கடந்த பத்து வருடங்களில் இணையவாசிகளை அதிகம் கவர்ந்த சமூக வலைதளம் என்றால் அது Orkut தான். ஆனால் ஃபேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் வரவால் Orkut சமூக வலைதளத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை.

அதனால் அந்த சமூகவலைதளத்தை உருவாக்கி நிர்வகித்து வந்த ஆர்குட் பைகோட்டன் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு தமது Orkut சமூக வலைதளத்தை மூடுவதாக அறிவித்தார்.

ஆனால் இப்பொழுது அதே போன்ற சமூக வலைதளம் ஹலோ (Hello) என்ற பெயரில் வந்துள்ளது. இந்த சமூக வலைதளமானது அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி, கனடா, மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆசிய கண்டத்தில் இந்த ஆகஸ்ட் மாதம் Hello என்னும் சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆனால் பிரபலமாக உள்ள ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டகிராம், மற்றும் ஸ்னப்சாட் போன்ற சமூக வலைதளங்களுடன் போட்டி போட்டு Hello சமூகவலைதளத்தால் மக்கள் மத்தியில் பிரபலமடைய முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related posts: