மனிதர்களுக்கு மருந்தாகும் கொமோடோ டிராகன் இரத்தம் !

Tuesday, February 28th, 2017

மாத்திரைகளுக்கு எதிர்ப்பு கொண்ட பக்டீரியா இனங்களை அழிக்கக்கூடிய ஆற்றல் கொமோடா டிராகன்களின் இரத்தத்திற்கு காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொமோடா டிராகன் என்பது உலகில் காணப்படும் பல்லி இனங்களுள் மிகவும் பெரியதாகும்.

இவை மூன்று மீற்றர்கள் வரையில் வளரக்கூடியதாகவும், 70 கிலோ கிராம்கள் எடை கொண்டதாகவும் இருக்கும். கொமோடா டிராகன் ஆனது இந்தோனேசியாவிலுள்ள 5 சிறிய தீவுகளில் அதிகம் காணப்படுகின்றது.

இவற்றின் இரத்தத்தில் காணப்படும் புரதத்திற்கு பக்டீரியாக்களை கொல்லும் ஆற்றல் காணப்படுகின்றது. இதற்கு முன்னர் கொமோடா டிராகன்கள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வின்போது அவற்றின் வாயில் 57 விதமான ஆபத்து மிக்க பக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த பக்டீரியாக்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பது தொடர்பிலான ஆதாரங்கள் எதுவும் விஞ்ஞானிகளுக்கு கிடைத்திருக்கவில்லை. இப்படியான நிலையிலேயே புதிய ஆய்வில் அவற்றின் குருதியில் பக்டீரியாக்களை கொல்லும் புதரம் காணப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)

Related posts: