ஜிமெயிலில் வரும் வீடியோக்களை தரவிறக்கம் செய்யாமல் பார்க்கும் வசதி கூகுளில் அறிமுகம்!

Sunday, March 19th, 2017

ஜிமெயில் (Gmail) சேவையைப் பயன்படுத்துவோருக்கு புதிய வசதியொன்றை கூகுள்.அறிமுகப்படுத்தியுள்ளது இதன் மூலம் ஜிமெலில் அனுப்பப்படும் வீடியோக்களை தரவிறக்கம் (download) செய்யும் முன் பார்வையிட முடியும்.

வீடியோ பயனுள்ளதாக இருப்பின் அதை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.புதிய வசதியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு டேட்டாவினை சேமிக்க முடியும்.

முன்னதாக ஜிமெயில் மூலம் அனுப்பப்படும் வீடியோக்களை தரவிறக்கம் செய்யாமல் பார்க்க முடியாது.புதிய அப்டேட் மூலம் வீடியோவின் முன்னோட்டத்தைப் பார்த்து தீர்மானிக்கும் வசதி கிட்டியுள்ளது.

வீடியோ இணைப்புள்ள மெயிலில் தரவிறக்கம் செய்யக்கோரும் பொத்தான் அருகில் வீடியோ ஸ்ட்ரீம் பொத்தான் இருக்கும்.

கூகுளின் யூடியூப், கூகுள் டிரைவ் மற்றும் இதர வீடியோ ஸ்டிரீமிங் செயலிகளுக்கு சக்தியூட்டும் உட்கட்டமைப்புகளைப் பயன்படுத்தி சீரான தரத்தில் வீடியோ காண்பிக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.

புதிய அப்டேட்டை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த 15 நாட்களில் இந்த வசதி வழங்கப்படவுள்ளது.

முன்னதாக ஜிமெயில் அட்டாச்மென்ட் அளவு 50 Mb யாக அதிகரிக்கப்பட்டது, இதோடு அண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கான ஜிமெயில் செயலியில் பணம் அனுப்பும் வசதியை அமெரிக்காவில் மட்டும் கூகுள் வழங்கியுள்ளது.

Related posts: