ஓட்டுனர்கள் இல்லாமல் இயங்கும் ரயில் அறிமுகம்!

Sunday, June 12th, 2016

ஜேர்மனி நாட்டில் ஓட்டுனர்கள் இல்லாமல் தானாக இயங்கும் ரயில்கள் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியின் Deutsche Bahn (DB) ரயில் நிறுவன சேர்மனான Rudiger Grube என்பவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, ‘’எதிர்வரும் 2023ம் ஆண்டிற்குள் ஓட்டுனர்கள் இல்லாமல் தொழில்நுட்பம் மூலம் தானாக இயங்கும் அதிவேக மற்றும் குறைந்த வேகத்தில் இயங்கும் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இதுமட்டுமில்லாமல், சரக்கு ரயில்களிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படும்.

பைலட் திட்டத்தின் அடிப்படையில் அறிமுகமாகவுள்ள இந்த நவீன தொழில்நுட்ப வசதியானது தற்போது சிக் குடியரசு எல்லைக்கு அருகில் Ore Mountains பரிசோதனை ஓட்டமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நவீன வசதி தொடர்பாக ரயில் நிறுவன தொழிலாளர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

ஜேர்மனியில் கார் உற்பத்தி நிறுவனங்களான ஆடி மற்றும் பிஎம்டபள்பூ ஆகியவைகள் தானியங்கி கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

எனவே, இந்த புதிய தொழில்நுட்பத்தில் ரயில் துறையும் இணைந்து செயல்ப்பட்டு பயணிகளுக்கு தரமிக்க சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என Rudiger Grube தெரிவித்துள்ளார்

Related posts: