பேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் செய்தி!

Monday, June 13th, 2016

இன்று வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தனக்கு அடிமையாக்கி வைத்திருக்கும் முன்னணி சமூகவலைத்தளம் பேஸ்புக் ஆகும்.

இவ் வலைத்தளத்தின் ஊடாக பயனர்களுக்கு புதிய வசதிகள் வழங்கப்பட்டு அவர்களை மேலும் கவரும் உத்தியை அந் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிரும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

இவ் வசதியினை நேற்றைய தினம் முதல் பயனர்கள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. எனினும் 360 டிகிரி புகைப்படங்களை எப்படி எடுப்பது என்ற கேள்வி உங்கள் மனதில் எழும் அல்லவா?

ஆம், அதற்கான சில வழிமுறைகள் இதோ.உங்களிடம் உள்ள iOS சாதனம் அல்லது சம்சுங் கேலக்ஸி மொபைலில் பனோரமா (Panorama) முறையில் 360 டிகிரி புகைப்படங்களை பதிவு செய்துகொள்ள முடியும்.

இல்லாவிடில் Street View அல்லது Google Camera அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதைவிட 360 டிகிரியில் புகைப்படங்களை எடுப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்ட Samsung Gear 360, RICOH THETA S, 360Fly, Giroptic 360 Cam, ALLie Camera அல்லது Panono என்பவற்றினை பயன்படுத்தலாம்.

Related posts: