மரணத்தை தள்ளிப் போடும் மருந்து கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் அசத்தல்

Wednesday, July 5th, 2017

மரண விளிம்பில் உள்ளவர்களை பிழைக்க வைத்து, அவர்களை சுற்றியுள்ளவர்களிடம் 4 மணி நேரம் பேச வைக்கக்கூடிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நோய்களின் காரணமாக மனிதர்களுக்கு மரணம் ஏற்படுகிறது. மரணத்தை வெல்லும் மருந்து கண்டுபிடிக்கப்படாதா என்ற ஏக்கமும், கேள்வியும் பலரிடம் உள்ளது.

இது தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிகளும் பல காலமாக நடந்து வருகின்றது. இந்நிலையில் மரணத்தை தள்ளிப்போடும் மருந்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

சோல்பிடிம் என பெயர் கொண்ட மருந்தானது, மரண விளிம்பில் உள்ளவரை சுமார் 4 மணி நேரம் வரை உயிர் பிழைக்க வைத்து சுற்றி உள்ளவர்களுடன் பேச வைக்கும் திறன் கொண்டது. இதுதொடர்பாக அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைகழக வல்லுனர்கள் கோமா, பார்கின்சன் நோய், பக்கவாதம் உட்பட 20 நரம்பியல் பிரச்சனை உள்ளவர்களிடம் இந்த மருந்து எப்படி வேலை செய்கிறது என ஆய்வு நடத்தினார்கள்.

இதில் மருந்து கொடுக்கப்பட்ட பிறகு அவர்களின் உடல் நிலை மேம்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பீட்டர்சன் என்ற நரம்பியல் மருத்துவர் கூறுகையில், சோல்பிடிம் மருந்து கொடுத்த பிறகு குறைந்தபட்ச உணர்வுள்ள நிலைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறியுள்ளார் அங்கு அவர்களை சுற்றியுள்ளவர்களுடன் பேச நோயாளிகள் முயற்சித்தார்கள் எனவும் பீட்டர்சன் கூறியுள்ளார்.

Related posts: