2017இல் பூமியில் விழும் விண்வெளி ஓடம்!

Wednesday, September 21st, 2016

சீனாவின் முதலாவது விண்வெளி நிலையம் அடுத்த ஆண்டு இறுதியில் வளிமண்டலத்தில் எரிந்தபடி பூமியில் விழ இருப்பதை சீன அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

2017இன் கடைசி பாதியில் இந்த விண்வெளி கலன் பூமியில் விழவிருப்பதாகவும் இதனால் பூமியில் எந்த பாதிப்பு ஏற்படாது என்றும் சீன விண்வெளி திட்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

டியாங்கொய் — 1 என்ற சர்வதேச விண்வெளி நிலையம் 2011 ஆம் ஆண்டு ஏவப்பட்டதோடு அதன் செயற்பாடுகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்தது.

இந்த விண்கலன் தற்போது சராசரியாக 370 கிலோமீற்றர் உயரத்தில் பூமியை சுற்றி வருகிறது. “எமது கணிப்புகளின்படி இந்த விண்களத்தின் பெரும்பாலான பகுதி வழிமண்டலத்தில் எரிந்து அழிந்துவிடும்” என்று சீன விண்வெளி திட்டத்தின் பிரதி இயக்குனர் வூ பிங் குறிப்பிட்டார். இதனால் விமானப் போக்குவரத்துகளுக்கோ அல்லது தரையிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று உறுதி அளித்துள்ளார்.

தற்போது கட்டுப்பாட்டை இழந்து விண்ணில் சுற்றிவருவதாக நம்பப்படும் டியாங்கொய் — 1 ஆய்வு கலனை சீனா தொடர்ந்து அவதானித்து வருவதாகவும் ஏனைய விண் பொருட்களுடன் மோதும் அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்க முடியுமாக இருப்பதாகவும் சீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தேவை ஏற்படின் குறித்த விண்களம் பூமியில் விழுவது குறித்து சர்வதேச அளவில் சீனா அறிவிப்பொன்றை விடுக்கும் என்றும் வூ பிங் குறிப்பிட்டுள்ளார். டியாங்கொய் – 1 விண்வெளி ஆய்வு நிலையம் 8.5 மெட்ரிக் தொன் எடையும், 34 அடி நீளமும் கொண்டதாகும்.

coltkn-09-21-fr-04153619229_4784884_20092016_mss_cmy

Related posts: