சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம்!

Monday, May 28th, 2018

சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம், சுமார் 11 லட்சம் மனிதர்களின் பெயர்களை தாங்கிக் கொண்டு பயணிக்க உள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளான சூரியன், வாயுப் பொருட்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். இதன் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர் ஆகும்.

சந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்கு இதுவரை விண்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், சூரியனுக்கு விண்கலம் அனுப்பி ஆய்வு செய்யும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது.

இதற்காக சூரியனின் சுற்றுப்புற தட்ப வெப்ப நிலையை பொறுத்து, அதனை தாங்கக் கூடிய வகையில் விண்கலம் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Parker Solar எனும் இந்த விண்கலம், 11 லட்சம் மனிதர்களின் பெயர்களை தாங்கி செல்ல உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரை சூரியனின் வளிமண்டலத்தில் எந்த விண்கலமும் இதற்கு முன்பு சென்றதை விட, இந்த விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு நடத்தும் என்றும் கூறுகிறது.

இதுகுறித்து விஞ்ஞானி நிக்கோலா ஃபாக்ஸ் கூறுகையில், ‘Parker சூரிய ஆய்வின் மூலம் சூரியன் பற்றிய நமது புரிதலை இன்னும் அதிகமாக்கும். ஒரே நட்சத்திரத்தை நாம் நெருங்கிப் படிக்க முடியும். மேலும், இந்த விண்கலம் பல லட்சம் மக்களின் பெயர்களை சுமந்து செல்கிறது’ என தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில், ஒரு நட்சத்திரத்தை தொடுவதற்கு மக்கள் தங்கள் பெயர்களை அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டனர். 2 மாதங்களில் மொத்தம் 11, 37, 202 பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டன.

மே 18ஆம் திகதி இந்த பெயர்கள் கொண்ட Memory card பொருத்தப்பட்ட இந்த விண்கலம், ஜூலை மாதம் 31ஆம் திகதி விண்ணில் சூரியனுக்கு அனுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: