மிக வயதான பாண்டா கரடி மரணம்!

கூண்டில் வைக்கப்பட்ட அதிக வயது கொண்டது என நம்பப்படும் பாண்டா ஒன்று 38 வயதில் இறந்துள்ளது.
ஹொங்கொங் ஓஷன் பூங்காவில் இருந்த ஜியா ஜியா என்ற இந்த பாண்டா கரடியின் வயது மனித வயதுடன் ஒப்பிடுகையில் 100 வயதுக்கும் அதிகமாகும். அண்மைக் காலத்தில் இந்த பெண் பாண்டாவின் உடல்நிலை மோசமடைந்து வந்ததாக பூங்கா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்குள் ஜியா ஜியா உணவு உட்கொள்ளும் அளவு நாளொன்றுக்கு 10 கிலோகிராமில் இருந்து 3 கிலோகிராம் வரை வீழ்ச்சி கண்டு எடை வேகமாக குறைந்ததாக பராமரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1978 ஆம் ஆண்டு சீனாவின் சிச்சுவான் வனத்தில் பிறந்த இந்த பாண்டா 1999 ஆம் ஆண்டு அரை தன்னாட்சி நகரான ஹொங்கொங்கிற்கு வழங்கப்பட்டது. காட்டில் வாழும் பாண்டாக்கள் சராசரியாக 20 ஆண்டுகள் உயிர்வாழ்வதோடு கூண்டில் அவை சராரியாக 25 ஆண்டுகள் உயிர்வாழும்.ஜியா ஜியாவின் 37ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை மாதம் தான் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
Related posts:
|
|