மர்மம் ஏன் மறைக்கப்பட்டது?

Saturday, November 26th, 2016

உலக வரைபடத்தை வரைந்தவர் யார்? சட்டென்று கொலம்பஸ் என்பார்கள் சிலர், அமெரிக்காவை கண்டுபிடித்தவர் மட்டுமே கொலம்பஸ் என உலகம் நம்பிவருகின்றது ஆனால் இவை பொய்யாகும்.

ஆனாலும் 6ஆம் நூற்றாண்டை சேர்ந்த இமோகோ முன்டி Imago Mundi என்பவர் கல்லில் அல்லது களிமண்ணில் உலக வரைபடத்தை வரைந்தார் எனவும் கூறப்படுகின்றது. ஆனாலும் வரைபடங்கள் தொடர்பில் திட்ட வட்டமாக இது வரை கூறப்பட வில்லை.

மேலும் அமெரிக்காவை கொலம்பஸ்க்கு முன்னரே வேறு சிலர் கண்டு பிடித்து விட்டனர். ஏன் முழு உலகையுமே இவர்களுக்கு முன்னர் வேற்றுக்கிரகத்தை சேர்ந்தவர்கள் வலம் வந்துள்ளனர் என ஆய்வாளர்கள் நிறுவியுள்ளார்கள். விண்ணுலகின் தோற்றம், புவியின் தோற்றம், புவிப்பரப்பு வளைந்துள்ளதையும் கிழக்கு மேற்காக புவி உருளையாக இருக்கின்றது எனவும் கூறி முதல் உலக நிலவரை வரைந்தவர் அலெக்சிமாண்டர் எனப்படும் மெய்யியலாளர்.

கி.மு 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கர் இவர். துல்லியமாக உலக வரைபடத்தை வரைந்தது எவ்வாறு? என்று கூற முடியவில்லை.உலக வரைபடத்தை வரைய வேற்றுகிரகவாசிகள் உதவி செய்திருப்பார்கள், அல்லது வேற்றுக்கிரக வாசிகளின் உருவாக்கியதை பூமிவாசிகள் சொந்தம் கொண்டாடுகின்றார்கள் என ஆய்வாளர்கள் அடித்து கூறுகின்றனர்.

உலகை கற்பனையில் வரைவது சாத்தியம் இல்லை நேராக சென்று பார்த்து வரைவதும் முடியாத காரியம், வான்பரப்பில் இருந்து பூமியை பார்க்காமல் எப்படி அவரால் (அவர்களால்) இது சாத்தியமானது என்பது சிந்திக்கப்பட வேண்டியதே.

625.0.560.320.160.600.053.800.668.160.90

1903ஆம் ஆண்டே விமானம் கண்டு பிடிக்கப்பட்டது, அதற்கு முன்னர் எப்படி வானில் இருந்து புவியின் அமைவிடங்களை குறிக்க முடிந்தது. இந்த சந்தேகமே வேற்றுக்கிரகத்தினை இந்த விடயத்தில் உள்வாங்கியுள்ளது.

அதேபோன்று கி.மு 6ஆம் நூற்றாண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் உலக வரைபடம் கி.மு 4ஆம் நூற்றாண்டிலேயே பாவனையில் இருந்ததாக கூறப்படுகின்றது அது அமானுஷ்யமான விடயம் தான்.

இதில் ஆச்சரியம் என்னனெனில் 1492ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் அமெரிக்கா கி.மு 4ஆம் நூற்றாண்டு வரையப்பட்ட வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளதாம், இந்த வரைபடம் 1929ஆம் வருடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பிரி ரெய்ஸ் (Piri Resi) எனப்படும் இந்த வரைபடத்தில் மூலம் குடாக்கள், கடற்கரைகள், நீரோடைகள், போன்றன தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாம். மேலும் 1820ஆம் ஆண்டு வரை கண்டுபிடிக்கப்படாத உலகம் பனியினால் மூடியிருந்த பகுதிகளும் துல்லியமாக குறிக்கப்பட்டுள்ளது.

அந்தாட்டிக்காடிவின் குயீன் மௌன்ட்லேன்ட் Queen Maud Land எனப்படும் பகுதி பனியினால் மூடப்படுவதற்கு முன்னர் வரைபடத்தில் அதனை வரைந்தவர் யார்? அப்படி எனில் சுமார் கி.மு 3ஆம் நூற்றாண்டுகளிலேயே கடல் வணிகம் நடைபெற்றுள்ளது அந்தக் காலப்பகுதியிலேயே உலகவரைபடங்கள் வரையப்பட்டுள்ளன அப்படியாயின் வரைந்தது யார்?

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

இவை ஒரு புறம் இருக்கட்டும் கடல் பயணமே சாத்தியப்படாத நாகரீகம் இருந்த காலம் வானில் இருந்து உலகத்தை வரைந்தது யார்? இந்த கேள்விக்கு வேற்றுக்கிரக வாசிகளை சுட்டிக்காட்டுகின்றார்கள் என ஆய்வாளர்கள்.

இவை அனைத்தையும் தொகுத்துப்பார்க்கும் போது மிக நேர்த்தியாக வரலாறுகள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் வேற்றுக்கிரக வாசிகளுடன் உலகம் தொடர்பில் இருந்துள்ளது. அவர்கள் உலகை வலம் வந்துள்ளார்கள் இன்றும் வந்து கொண்டிருக்கின்றார்கள் ஆனாலும் இந்த மர்மம் மறைக்கப்படுகின்றது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

Related posts: