மனித உடலில் புதிய உறுப்பு அமெ. பல்கலை கண்டுபிடிப்பு
Sunday, April 1st, 2018
மனித உடலில் புதிய உறுப்பொன்று உள்ளதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்று பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அமெரிக்காவின் நியூயோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இண்டெர்ஸ்டிடியம் என்ற இந்தப் பாகம் தோலுக்கடியில் படர்ந்து காணப்படுகின்றது. இது உடல் திசுக்களைப் பாதுகாக்கப் பயன்படுகின்றது. இந்த உறுப்பானது உடலின் அனைத்துப் பாகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. நுரையீரல், குருதிக் குழாய்கள் மற்றும் தசைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது உடலில் உள்ள பெரிய உறுப்புக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இது கொலாஜன் மற்றும் எலாஸ்டினிலால் உருவானது. அதாவது மிகவும் உறுதியாகவும் வளையும் தன்மையுடனும் உள்ளது. புற்று நோய் உடல் முழுவதும் எவ்வாறு பரவுகிறது என்பதை அறிய இந்த உறுப்பு உதவும் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


