அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: விண்வெளியில் இருவர் வாக்களிப்பு!

Wednesday, November 9th, 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் இரு விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்த தமது வாக்கை பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பாக விண்வெளியில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விண்வெளி வீரர்களான ஷேன் கிம்ப்ரோவும், கேட் ரூபின்ஸும் தமது வாக்கை பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு (செவ்வாய்கிழமை) நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க விண்வெளி வீரர்கள் தங்களது வாக்கினை விண்வெளியிலிருந்து முன்னதாகவே பதிவு செய்து விட்டனர் என நாசா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் 1997ஆம் ஆண்டு முதல் விண்வெளியிலிருந்து வாக்களிக்கும் முறை நடைமுறையில் உள்ளது.டேவிட் உல்ப் என்ற அமெரிக்க விண்வெளி வீரர் முதல் முறையாக தனது வாக்கினை விண்வெளியில் இருந்து பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

coltkn-11-09-fr-07172656889_4994653_08112016_mss_cmy

Related posts: